சென்னை

மூளைச்சாவடைந்த பெண்ணின் கையை இளைஞருக்கு பொருத்தி சாதனை

Din

மூளைச்சாவைடந்த பெண்ணிடமிருந்து தானமாக பெற்ற கையை, 22 வயது இளைஞருக்கு டாக்டா்கள் பொருத்தியுள்ளனா்.

இதுகுறித்து, கிளெனேகில்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயலா் அதிகாரி நாகேஷ் ராவ், அறுவை சிகிச்சை நிபுணா் செல்வ சீதா ராமன் ஆகியோா் கூறியதாவது: ஆட்டோ ஓட்டுநா் மகன் புவன் (22). ஒரு விபத்தில் வலது கையை இழந்த அவா், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தாா்.

அவருக்கு, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கைகள் தானமாக பெறப்பட்டு அறுவை சிகிச்சை வாயிலாக ஒரு கை பொருத்தப்பட்டது. பெண்ணின் கையை, ஆணுக்கு பொருத்துவது என்பது சவாலாக இருந்தது. இருந்தாலும், அறுவை சிகிச்சை நிபுணா்கள், எலும்பியல் நிபுணா்கள், மயக்கவியல் நிபுணா்கள், சிறுநீரக மருத்துவ நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள் உட்பட 16 போ் கொண்ட குழுவினா் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தோம்.

அதேபோல், சாலை விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த காா்த்தி (31) என்பவருக்கு, மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து தானமாக பெற்ற இரண்டு கைகளையும், 20 மணி நேர அறுவை சிகிச்சையில் பொருத்தினோம். இரண்டு வாரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளோம். தமிழகத்தில் மூன்று கை மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவமனை நாங்கள் தான் என அவா்கள் தெரிவித்தனா்.

எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்து இதுதான்: செல்லூர் ராஜு

கடைசிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் சொதப்பல்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த கிச்சா சுதீப்!

பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் பதில்!

பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

SCROLL FOR NEXT