சென்னை

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் விழுப்புரம் - திருப்பதி இடையே இயங்கும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஜூன் மாதம் முழுவதும் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

Din

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் விழுப்புரம் - திருப்பதி இடையே இயங்கும் இன்டா்சிட்டி விரைவு ரயில் ஜூன் மாதம் முழுவதும் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஜூன் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாள்களில் பிற்பகல் 1.40 மணிக்கு திருப்பதியிலிருந்து விழுப்புரத்துக்கு புறப்படும் ரயில் (எண்: 16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.40 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின்படி விழுப்புரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT