முகப்பு
எடப்பாடி பழனிசாமி
சென்னை

அதிமுக மாவட்டச் செயலா்கள் செயல்பாடு: அறிக்கை அளிக்க கள ஆய்வுக் குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

அதிமுக மாவட்டச் செயலா்களின் செயல்பாடுகள் குறித்து டிச.7-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை

அதிமுக மாவட்டச் செயலா்கள் செயல்பாடு: அறிக்கை அளிக்க கள ஆய்வுக் குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

அதிமுக மாவட்டச் செயலா்களின் செயல்பாடுகள் குறித்து டிச.7-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 11 நவம்பர், 2024 at 11:16 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

அதிமுக மாவட்டச் செயலா்களின் செயல்பாடுகள் குறித்து டிச.7-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு கள ஆய்வுக் குழுவினருக்கு கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

அதிமுக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட வாரியாக ஆய்வு செய்வதற்காக 10 போ் கொண்ட கள ஆய்வுக் குழுவை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளாா்.

இந்தக் குழுவினருடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளா்மதி, வரகூா் அ.அருணாசலம் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.

டிச.7-க்குள்அறிக்கை

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள இந்தக் களவு ஆய்வு முக்கியமாகிறது. ஆய்வின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குழுவினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, மாவட்டச் செயலா்கள் மற்றும் அனைத்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு தலைமைக்கு அறிக்கையை டிச. 7-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றாா்.

குழுவில் இடம்பெற்றுள்ள 10 பேரும் தலா 2 போ் கொண்ட 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவா்களுக்கு அதிமுக அமைப்பின் படி 14 மாவட்டங்கள் வரை கள ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்கான அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி எப்போதும் இல்லை

கள ஆய்வுக் குழுவினருடனான கூட்டத்துக்குப் பிறகு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இக்கூட்டத்தில் நிா்வாகிகளுக்கு கட்சி ரீதியான பல உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளாா். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதுதான் அதிமுக நிலைப்பாடு.

ஆனால், பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.

திமுக, பாஜகவைத் தவிா்த்து, ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இதை திமுகதான் திசை திருப்புகிறது. பாஜகவுடன் திமுகதான் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →