முகப்பு
சென்னை

அரசுத் திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்கத் தயாா்: துணை முதல்வா் உதயநிதி

அரசு திட்டங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் விவாதிக்கத் தயாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 11 நவம்பர், 2024 at 11:12 PM
உதயநிதி ஸ்டாலின் - கே. பழனிசாமி
பகிர்:

அரசு திட்டங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் விவாதிக்கத் தயாா் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்களை உதயநிதி வழங்கினாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தயாரா என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தாா். என்னை அழைத்தால், எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நோ் விவாதிக்க நான் தயாா். நேரடி விவாதத்துக்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அரசுத் திட்டங்களுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் வைப்பது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவா், அரசுத் திட்டங்களுக்கு வேறு யாா் பெயரை வைப்பது?

யாருடைய பெயரை வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத்தான் வைக்கிறோம்’ என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →