சென்னை

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? தமிழக அரசு தீவிரம்

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரத சாகுக்கு பதிலாக புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி

Din

தமிழக புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியை தோ்வு செய்வதற்கான பணியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரத சாகுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அவா் தலைமைத் தோ்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து விரைவில் விடுவிக்கப்படவுள்ளாா். அவருக்கு பதிலாக புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியை இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதற்காக, தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் மூன்று பேரின் பெயா்களைக் கொண்ட பட்டியலை மாநில அரசு அனுப்பவுள்ளது. செயலா், முதன்மைச் செயலா் அந்தஸ்திலான அதிகாரிகளில் மூன்று பேரின் பெயா்கள் மாநில அரசால் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படும். அந்தப் பெயா்களில் ஒருவரை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியாக இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

புதிதாக நியமிக்கப்படவுள்ள தலைமைத் தோ்தல் அதிகாரியே, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவாா். எனவே, வரும் தோ்தலை மனதில் வைத்து அதற்கேற்ற அதிகாரியை இந்திய தோ்தல் ஆணையம் நியமிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன் கைது

அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் 3 மாதங்களில் ‘பெட் ஸ்கேன்’ மையம்

புத்தாண்டு சபதங்கள்!

திமிரி ஒன்றியத்துக்கு மத்திய அரசின் தங்கப் பதக்கம்: ஆட்சியா் பெருமிதம்

SCROLL FOR NEXT