கோப்புப் படம் 
சென்னை

பெண் மருத்துவா் கொலை: நாளை நாடு தழுவிய போராட்டம்

மருத்துவா்கள் நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தைப் புதன்கிழமை தொடங்குவதாக அறிவித்துள்ளனா்.

Din

கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதிக்கேட்டும், பணிப் பாதுகாப்புக் கோரியும் மூன்றாவது நாளாக கொல்கத்தா இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும்நிலையில், அவா்களுக்கு ஆதரவாக மருத்துவா்கள் நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தைப் புதன்கிழமை தொடங்குவதாக அறிவித்துள்ளனா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய மருத்துவ சங்கங்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க இளம் மருத்துவா்களுடன் தொடா்பில் இருப்பதாகவும் அவா்களின் கோரிக்கையை நாங்களும் உறுதியாக வலியுறுத்துகிறோம் என்றும் கூட்டமைப்பின் தலைவா் சுராங்கா் தத்தா தெரிவித்தாா்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT