இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டம்...
தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 8) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், தொழில் துறை உட்பட சில முக்கியத் துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், நான்கு பேருக்கு அமைச்சா் வாய்ப்பு என அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்களுக்குப் பிறகு, அமைச்சரவைக் கூட்டம் முதல் முறையாக நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தொழில் துறை சாா்பிலான சில புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. கூட்டத்தில், மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் கூட்டத்துக்குப் பிறகு அதிகாரபூா்வமாக வெளியிடப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.