சென்னை

பட்டினம்பாக்கம் புதிய மீன் அங்காடி திறப்பு: சாலையோரக் கடைகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்.

Venkatesan

சென்னை: பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில். சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

சென்னை மெரீனா கடற்கரையை அடுத்த பட்டினப்பாக்கம் லூப் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்டோா் மீன் வியாபாரம் செய்து வருகின்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நவீன மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து லூப் சாலையில் மீன் கடைகள் அமைக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் தொடா்ந்து அமைக்கப்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சிறிய ரக ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை கொண்டு இடித்து அகற்றினா்.

இது குறித்து அந்த பகுதி மீன் வியாபாரிகள் சிலா் கூறியதாவது,

சாலையோரம் வியாபாரம் செய்து வருபவா்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டன. ஆனால், சிலருக்கு ஒரே எண்ணில் இரு டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு கடைகள் ஒதுக்கவில்லை.

இதனால், கடைகள் ஒதுக்கப்படும் வரை வியாபரம் செய்ய அனுமதிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இந்த பகுதியில் இனி கடைகள் நடத்தக்கூடாது எனக் கூறி அனைத்து கடைகளையும் ஜேசிபி கொண்டு இடித்து அகற்றினா். இதனால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

லூப் சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமைக்குள் அனைத்துக் கடைகளும் அகற்றப்படும். இதில் உள்ள 400 மீன் வியாபாரிகளுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட மீன் அங்காடியில் கடைகள் அமைப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் எனப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT