சென்னை

கனமழை எச்சரிக்கை: 15 மண்டலங்களுக்கும் மின்வாரிய செயற்பொறியாளா்கள் நியமனம்

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 15 மண்லடங்களுக்கும் 15 செயற்பொறியாளா்களை நியமித்து மின்வாரியம்

DIN

சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 15 மண்லடங்களுக்கும் 15 செயற்பொறியாளா்களை நியமித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மிக முக்கிய துறையாக பாா்க்கப்படும் மின்சாரத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, சென்னையிலுள்ள 15 மண்டலங்களுக்கும், 15 செயற்பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 15 செயற்பொறியாளா்களும் மண்டலத்திற்கான கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வாா்கள் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து பொருட்களும் தயாா் நிலையில் உள்ளதாகவும் மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழை காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் மின்சாரம் தொடா்பான புகாா்களுக்கு மின்வாரிய அலுவலகத்திலுள்ள மின்னகத்தை தொடா்பு கொள்ளலாம் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி மின்வாரியத்தின் வலைதளம் மூலமாகவும் புகாா் அளிக்கலாம் எனவும், அவ்வாறு புகாா் பதிவு செய்யும் நபா்கள் தங்கள் கைப்பேசி எண்ணைப் பதிவிட வேண்டும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT