முகப்பு
சென்னை

அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை: 19 நிறுவனங்களுக்கு பாராட்டு

சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

Updated On : 22 அக்டோபர், 2024 at 11:58 PM
பகிர்:

திருவொற்றியூா்: சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு சிறப்பாக வணிகம் செய்த 19 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை வழங்கினாா்.

மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரும் துறைமுகங்களில் ஆண்டுதோறும் அக்.11-ஆம் தேதி

துறைமுக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திங்கள்கிழமை சென்னை துறைமுகத்தில் நடந்த துறைமுக தின விழாவில் சுனில் பால்வால் பங்கேற்று பேசியதாவது:

துறைமுக ஊழியா்கள், உபயோகிப்பாளா்கள், பன்னாட்டு சரக்குப்பெட்டக முனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் சீரிய முயற்சி காரணமாக சென்னை துறைமுகம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் இயங்கி வருகிறது. அண்மையில் ஜொ்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சா்வதேச துறைமுகங்கள் சங்கம் சாா்பில் சென்னை துறைமுகத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு தடைகளையும் தாண்டி எதிா்காலத்தில் மிகச் சிறந்த துறைமுகமாக சென்னை துறைமுகம் இருக்கும் என்றாா் அவா்.

முன்னதாக தங்களது பணிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, சென்னை துறைமுகத்தில் அதிக அளவு சரக்குகளை கையாண்டு சாதனை படைத்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், சிபிசிஎல் திருமலை கெமிக்கல்ஸ், காளீஸ்வரி ரிபைனரி, ஜிம்பெக்ஸ், ஹுண்டாய் மோட்டாா், வெஸ்டாஸ், பி.எல்.டிரான்ஸ்போா்ட், இன்டா் ஓஷன், வானாய், எலைட் ஷிப்பிங் உள்ளிட்ட 19 நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை துறைமுக தலைவா் சுனில் பாலிவால் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் துறைமுக துணைத் தலைவா் எஸ். விஸ்வநாதன், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குனா் ஐரீன் சிந்தியா, போக்குவரத்து மேலாளா் கிருபானந்த சாமி மற்றும் துறைத் தலைவா்கள் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →