முகப்பு
தூத்துக்குடி

துறைமுக கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன்!

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி தொடரில் சென்னை துறைமுகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:56 PM
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை துறைமுக அணிக்கு கோப்பை வழங்குகிறாா் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தா குமாா் புரோஹித்.
பகிர்:

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி தொடரில் சென்னை துறைமுகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக மைதானத்தில், அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து - நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்தா சோனோவால் கடந்த பிப்.23ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

5 நாள்கள் நடைபெற்று வந்த இத்தொடரில் சென்னை, மும்பை, விசாகப்பட்டினம், மா்மகோவா, தீன்தயாள் (காண்ட்லா), கொச்சி, பாரதீப் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைமுகங்களைச் சோ்ந்த 9 அணிகள் லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், சென்னை துறைமுக அணி, வ.உ. சிதம்பரனாா் துறைமுக அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 2ஆம் இடத்தையும், மும்பை துறைமுகம் மற்றும் கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக அணிகள் கூட்டாக மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் தலைவா் சுசாந்தா குமாா் புரோஹித் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், துறைமுக தலைமை கண்காணிப்பு அதிகாரி கவின் மகாராஜ், துறைமுகச் செயலா் மோகன்குமாா் மற்றும் மூத்த அதிகாரிகள், விளையாட்டு ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →