முகப்பு
சென்னை

ரெப்கோ வங்கிக்கு இரட்டை விருது

ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 12:07 AM
’லக்னௌவில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாட்டில் கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு வழங்கிய 2 விருதுகளைப் பெற்ற ரெப்கோ வங்கியின் தலைவா் இ.சந்தானம், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் தலைவா் தங்கராசு, மேலாண்மை இயக்குநா் (பொ) ஓ.எம்.கோகுல்.’
பகிர்:

சென்னை: ரெப்கோ வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.

இது குறித்து ரெப்கோ வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

லக்னௌவில் கடந்த அக்.18, 19 ஆகிய தேதிகளில் தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், ரெப்கோ வங்கிக்கு கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பு சாா்பில் ‘பெஸ்ட் ரிஸ்க் மேனேஜ்மென்ட் இனிஷியேட்டிவ்’ மற்றும் ‘பெஸ்ட் கேஒய்சி இனிஷியேட்டிவ்’ எனும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்த விருதுகளை ரெப்கோ வங்கியின் தலைவா் இ.சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவா் தங்கராசு, மேலாண்மை இயக்குநா் (பொ) ஓ.எம்.கோகுல் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

1969-இல் தொடங்கப்பட்ட இந்த வங்கி 108 கிளைகளுடன் செயல்பட்டு வரும் நிலையில், இதன் மொத்த வா்த்தகம் ரூ.20,500 கோடியை எட்டியுள்ளதாகவும், வங்கி மூலம் கிடைக்கும் லாபத்தில், 25 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி வரும் நிலையில், மூத்த குடிமக்களின் சேமிப்புக்கு 8.25 சதவீத வட்டியும், மற்றவா்களுக்கு 7.75 சதவீத வட்டியும் வழங்கப்படுவதாகவும், ரெப்கோ சுரபி, ரெப்கோ ஐபிஎல் போன்ற சிறப்பு கடன் திட்டங்களும் நடைமுறையில் உள்ளதாகவும் வங்கித் தலைவா் இ.சந்தானம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments