மெட்ரோ ரயில் CMRL
சென்னை

தீபாவளி: மூன்றரை நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்!

தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மெட்ரோ கூடுதல் ரயில்கள் இயக்குவது பற்றி...

DIN

சென்னையில் கூட்ட நெரிசலுக்கு ஏற்றவாறு மூன்றரை நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு படிப்படியாக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இன்று மாலை முதல் சென்னையில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாள்தோறும் 2.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது 3 லட்சம் பேர் வரை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று மேலும் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இரு வழித்தடங்களிலும் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதாகவும், கூட்ட நெரிசலுக்கு ஏற்ற வகையில், அதிகபட்சமாக மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்க தயாராக இருப்பதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகலுக்கு மேல் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து படிப்படியாக மெட்ரோ சேவை அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், மெட்ரோ ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி கொண்டு சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT