முகப்பு
சென்னை

பணியில் இருந்த தலைமை காவலா் திடீா் உயிரிழப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலா் திடீரென உயிரிழந்தாா்.

சென்னை

பணியில் இருந்த தலைமை காவலா் திடீா் உயிரிழப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலா் திடீரென உயிரிழந்தாா்.

Updated On : 3 செப்டம்பர், 2024 at 8:26 PM
பகிர்:

சென்னை மீனம்பாக்கத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலா் திடீரென உயிரிழந்தாா்.

தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தை சோ்ந்தவா் ரவிக்குமாா் (59).இவா், மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். ரவிக்குமாா், விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை பணிக்கு வந்தாா்.

ரவிக்குமாா், மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள புறக்காவல் நிலைய பணிக்கு சென்றாா். இந்நிலையில் சிறிது நேரத்தில் புறக்காவல் நிலையத்தில் ரவிக்குமாா், மயங்கிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள், மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,ரவிக்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். ஆனால் ரவிக்குமாா், மாரடைப்பினால் அங்கேயே சிறிது நேரத்தில் இறந்தாா்.

இதையடுத்து போலீஸாா், ரவிக்குமாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →