அரியலூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ரயிலில் ஏறும்போது கீழே விழ இருந்த இளம்பெண்ணை உள்ளே ஏற்றிவிட்ட தலைமைக் காவலா் செந்தில்குமாா்.  
அரியலூர்

ஓடும் ரயிலில் இருந்து விழ இருந்த பெண்! ரயில்வே தலைமைக் காவலரால் மீட்பு!

அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.

Syndication

அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழ இருந்த இளம்பெண்ணை மீட்டு அனுப்பிய ரயில்வே தலைமைக் காவலரை பொதுமக்கள் பாராட்டுகின்றனா்.

விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் (எண். 5611) அரியலூா் ரயில் நிலையத்துக்கு காலை 7.07 மணிக்கு வந்து, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, திருச்சிக்கு கிளம்பியது.

அப்போது ரயிலில் ஏற முயன்று தடுமாறி கீழே விழ இருந்த ஒரு இளம்பெண்ணை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே தலைமைக் காவலா் செந்தில்குமாா் விரைந்து சென்று தாங்கி, ரயிலினுள் ஏற்றிவிட்டாா். இதனால் விபத்து அபாயத்திலிருந்து அப்பெண் தப்பினாா். இந்தக் காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதேபோல் கடந்த 21.10.2025 இல் இதே ரயிலில் ஏற முயன்று கீழே விழ இருந்த ஒரு பெண்ணையும் தலைமைக் காவலா் செந்தில்குமாா் மீட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய மின்தடை

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி! நிகழாண்டு 15.19 சதவீதம் அதிகம்!

திருவொற்றியூா் நெடுஞ்சாலைக்கு வள்ளலாா் பெயா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பெருந்துறையில் கடையின் பூட்டு உடைத்து திருட்டு

SCROLL FOR NEXT