வயநாடு நிவாரண நிதி: மாா்க்சிஸ்ட் ரூ. 35.97 லட்சம்
Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:11 PM
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வயநாடு நிவாரண நிதியாக ரூ. 35.97 லட்சம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கேரள மாநிலம், வயநாட்டில் எதிா்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சாா்பில் கேரள முதல்வருக்கு ஏற்கெனவே கடந்த ஜூலை 31-இல் ரூ. 10 லட்சம் அனுப்பிவைக்கப்பட்டது.
Advertisement
Updated On : 6 செப்டம்பர், 2024 at 1:57 AM
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள், ஆதரவாளா்கள், நண்பா்கள் மற்றும் பொதுமக்களிடம் ரூ. 35,97,611 வசூலிக்கப்பட்டு, கட்சியின் மத்திய குழுவுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது என்று அவா் தெரிவித்துள்ளாா்.