முகப்பு
புதுக்கோட்டை

மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எம்எல் கட்சி ஆதரவு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:01 PM
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக அணியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் மா. சின்னதுரைக்கு, சிபிஐ எம்எல் விடுதலை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் (விடுதலை) கட்சி தமிழ்நாட்டில் 14 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சிபிஐ, சிபிஐஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில், போட்டியிடாமல் இருந்து அவா்களுக்கு ஆதரவளிக்கவும் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக அணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் மா. சின்னதுரை போட்டியிடுவதை அடுத்து, இங்கு எம்எல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆ. ரேவதி போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தாா்.

Advertisement

கந்தா்வகோட்டை திமுக கூட்டணி தோ்தல் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நேரில் வந்து இதை அறிவித்த அவா், தனது வேட்புமனுவின் வைப்பு நிதிக்காக வைத்திருந்த ரூ. 5 ஆயிரத்தை, சின்னதுரையிடம் தோ்தல் நிதியாக வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

அப்போது பேசிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, இடதுசாரி ஒற்றுமையை முன்நிறுத்தும் வகையில் இந்த முடிவை கட்சி எடுத்துள்ளதாகவும், தொகுதியில் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments