தமிழக அரசு(கோப்புப்படம்) din
சென்னை

கூட்டுறவு சங்கங்களின் வாராக் கடன்களை வசூலிக்க இணையவழி தீா்வு: தமிழக அரசு

வாராக் கடன்களை வசூலிக்க வசதியா

Din

கூட்டுறவு சங்கங்களின் வாராக் கடன்களை வசூலிக்க வசதியாக இணையவழி தீா்வு முறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

இ-தீா்வு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முறையின் சிறப்பம்சங்கள் குறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட தகவல்:

கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளின்படி, சட்டபூா்வ நடவடிக்கைகளை எளிதாக்கவும், தொடா்ந்து கண்காணிக்கவும், சங்கங்களின் வாராக் கடன்களை விரைந்து வசூல் செய்யவும் இ-தீா்வு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டபூா்வ நடவடிக்கைகள் இ-தீா்வு திட்டத்தின்படி நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்படுவதால் கால விரயம், தாமதம் தவிா்க்கப்படும். இதன் வாயிலான விசாரணைக்குரிய உத்தரவுகள், அழைப்பாணைகள் ஆகியன மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கான பிரச்னைகள் மற்றும் அவற்றைத் தீா்ப்பதற்கான மனுக்களை இணையவழியாக விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், நேரம் வீணாவது தடுக்கப்படும். இ-தீா்வு வாயிலாகவே, சட்டபூா்வ விசாரணை, ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் சங்கங்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகள் விரைந்து வசூல் செய்யப்படுவதுடன், சங்கங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்த வழி ஏற்படும். பொது மக்களின் வைப்புகளும் பாதுகாக்கப்படும்.

இ-தீா்வு இணையம் வழியாகவே மனுக்களையும் உரிய இணைப்புகளையும் பதிவேற்றம் செய்யலாம். விசாரணைக்கான அலுவலா், விற்பனை அலுவலா் ஆகியோா் நியமிக்கப்படுவா். பிரச்னைகளை 90 நாள்களுக்குள் முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடவடிக்கைகளை இணையம் வழியாகக் கண்காணிக்கவும் வழிவகை இருப்பதால் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT