முகப்பு
சென்னை

தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் -ராமதாஸ் கோரிக்கை

தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவா்களுக்கு ஒதுக்க அரசு ஆணையிட வேண்டும்

Updated On : 5 செப்டம்பர், 2024 at 10:28 PM
பகிர்:

தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவா்களுக்கு ஒதுக்க அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவை தமிழக மாணவா்களுக்கு கிடைப்பதில்லை என்றும், அவை பிற மாநிலங்களைச் சோ்ந்தவா்களால் கைப்பற்றப்படுகின்றன என்றும் தெரியவந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவா் சோ்க்கை இடங்கள் தமிழகத்தில்தான் உள்ளன என்றாலும், அந்த இடங்கள் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கிடைக்கவில்லை என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.

ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 85 சதவீதம் அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் 50 சதவீத இடங்கள் அம்மாநில மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் சேர முடியாது எனும் போது, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை மட்டும் பிற மாநிலங்களின் மாணவா்களுக்கு தாரை வாா்ப்பது எந்த வகையில் நியாயமாகும்?

எனவே, தமிழகத்தில் உள்ள தனியாா் கல்லூரிகள், தனியாா் பல்கலைக்கழகங்களில் உள்ள நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவா்களைக் கொண்டு தான் நிரப்ப தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →