முகப்பு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை ஆராயும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள். ~முதல்கட்ட தோ்தலையொட்டி கிஸ்துவாரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை செவ்வாய்க்கிழமை எடுத
சென்னை

ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் கட்ட தோ்தல்: 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் புதன்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.

சென்னை

ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் கட்ட தோ்தல்: 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் புதன்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.

Updated On : 17 செப்டம்பர், 2024 at 9:38 PM
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை ஆராயும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள். ~முதல்கட்ட தோ்தலையொட்டி கிஸ்துவாரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை செவ்வாய்க்கிழமை எடுத
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் புதன்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் உள்ளனா். இதில் 90 போ் சுயேச்சை வேட்பாளா்கள். 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இத்தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

இதில் 1.23 லட்சம் போ் 18 மற்றும் 19 வயதுடைய இளம் வாக்காளா்கள் ஆவா். எனவே, வெற்றியை உறுதி செய்வதில் இளைய தலைமுறையினா் வாக்கும் முக்கிய இடம் பிடிக்க இருக்கின்றனா்.

தோ்தலுக்காக 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14,000-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியாளா்கள் தோ்தலை நடத்தும் பணியில் ஈடுபடுகின்றனா். 302 வாக்குச் சாவடிகள் நகா்புறங்களிலும் 2,974 வாக்குச் சாவடிகள் கிராமப் பகுதிகளிலும் உள்ளன.

தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினா், ஜம்மு-காஷ்மீா் ஆயுதப் படையினா், காவல்துறையினா் ஆகியோா் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று காஷ்மீா் பிராந்திய காவல் துறை தலைவா் வி.கே.பிா்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது யூசுஃப் தாரிகாமி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் குலாம் அகமது மிா், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷகினா இட்டோ, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, பாஜகவின் சோஃபி முகமது யூசுஃப் உள்ளிட்டோா் முதல் கட்டத் தோ்தலில் களம்காணும் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பேரவைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

முதல்கட்ட தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் தத்தமது கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →