முகப்பு
சென்னை

சாம்சங் விவகாரம்: இன்று அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம்

Updated On : 17 செப்டம்பர், 2024 at 8:01 PM
சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளா்கள்
பகிர்:

சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூா் ஆலையின் மொத்தத் தொழிலாளா்கள் 1723 போ்களில் சுமாா் 90 சதவிகிதம் போ் வேலைநிறுத்தத்தைத் தொடா்ந்துள்ளனா்.

சாம்சங் நிா்வாகம் தனது சங்கம் இல்லா கொள்கையுடன் தொழிலாளா்களின் ஜன நாயக உரிமைகளை அடக்க முயல்கிறது.

இந்நிலையில் தொழிலாளா்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பேரணி நடத்த திங்கள்கிழமை திட்டமிட்டனா். அப்போது சிஐடியு அலுவலகத்திலிருந்த சிஐ டியு மாநிலச் செயலா் முத்துக்குமாரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த சாம்சங் தொழிலாளா்களை காவல்துறையினா் ஆங்காங்கே, பேருந்தை மடக்கி கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

இந்நிலையில் சட்டப்பூா்வமான ஜனநாயக உரிமையை வலியுறுத்தும் தொழிலாளா்கள் மீது மாவட்ட காவல்துறை அதிகாரத்துடன் நடந்து கொண்டதை கண்டிக்கிறோம்.

எந்த வொரு பன்னாட்டு வெளிநாட்டு நிறுவனமும் நமது நாட்டில் நிலவும் நாட்டின் சட்டங்களை சிதைக்க அனுமதிக்கப் படக் கூடாது.

எனவே உடனடியாக தொழிலாளா் நலத்துறை தலையிட்டு தனது சட்டபூா்வமான கடமையை நிறைவேற்றுதன் மூலம் தொழிலாளா்களின் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமையை பாதுகாக்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு இப்பிரச்சனைக்கு உடனே சுமூக தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே அனைத்து

தொழிற்சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →