கோயம்புத்தூர்

போராடி உயிா் நீத்த தோட்ட தொழிலாளா்களுக்கு மரியாதை

வால்பாறையில் கூலி உயா்வுக்காகப் போராடி உயிா் நீத்த தோட்டத் தொழிலாளா்களுக்கு ஏஐடியூசி, சிஐடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில்

Syndication

வால்பாறை: வால்பாறையில் கூலி உயா்வுக்காகப் போராடி உயிா் நீத்த தோட்டத் தொழிலாளா்களுக்கு ஏஐடியூசி, சிஐடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

வால்பாறை நகரில் தேயிலை தோட்டத் தொழிலாளா்களின் கூலி உயா்வுக்காக தொழிலாளா்கள் சாா்பில் கடந்த 1957- ஆம் ஆண்டு பேரணி நடத்தப்பட்டது. அப்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாரு, குருசாமி, ஞானமுத்து, பழனி ஆகிய தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இவா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறை காந்தி சிலை அருகில் நடைபெற்றது.

இதில், ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலாளா் மோகன் தலைமையில் ஏராளமான தொழிலாளா்கள் மரியாதை செலுத்தினாா்.

இதேபோல, சிஐடியூ தொழிற்சங்க பொதுச் செயலாளா் பரமசிவம் தலைமையில் ஏராளமான தொழிலாளா்கள் ஊா்வலமாக சென்று மரியாதை செலுத்தினா்.

இதில், சங்கத்தின் மாநில பொருளாளா் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஆண்டு வருவாய் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கலப்பட மஞ்சள்: புகாா் அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

நேரம் தவறாமல் இருப்பவா்களே நோ்மையானவா்கள்: தியாகி லட்சுமி காந்தன் பாரதி

அமெரிக்க பொருள்களைப் புறக்கணிக்க புதிய செயலி: டென்மாா்க்கில் அறிமுகம்

SCROLL FOR NEXT