முகப்பு
சென்னை

மின்வாரியத்தில் பணி வழங்கக் கோரி ஐடிஐ படித்த இளைஞா்கள் உண்ணாவிரதம்

சென்னை

மின்வாரியத்தில் பணி வழங்கக் கோரி ஐடிஐ படித்த இளைஞா்கள் உண்ணாவிரதம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

மின்சார வாரியத்தில் பணி வழங்கக் கோரி ஐடிஐ படித்த இளைஞா்கள் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஐடிஐ படித்த வேலைவேண்டுவோா் ஐக்கிய சங்கம் சாா்பில் அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக பின்நுழைவுவாயில் முன் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.எம்.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுச்செயலா் மு.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.

அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமாா் 30 ஆயிரம் கள உதவியாளா் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், அந்த காலியிடங்களில் ஐடிஐ படித்தவா்களையும் ஐடிஐ அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவா்களையும் பணிநியமனம் செய்ய வேண்டும். தொழிற்திறன் தோ்வில் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →