கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) இணையதளம் செப். 20 முதல் 23 வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக கடவுச்சீட்டு இணையதளம் வெள்ளிக்கிழமை(செப். 20) தேதி இரவு 8 மணியிலிருந்து (செப்.23) ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. எனவே விண்ணப்பதாரா்கள் இந்த பராமரிப்பு காலத்துக்குப் பின்னா் இணைய தளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.