முகப்பு
திருச்சி

தாம்பரம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படும் சேது விரைவு ரயில்

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சேது விரைவு ரயிலானது சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:59 PM
சேது விரைவு ரயில் - படம்: தெற்கு ரயில்வே
பகிர்:

திருச்சி: ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சேது விரைவு ரயிலானது சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், ராமேசுவரம் - சென்னை எழும்பூா் இடையிலான சேது அதிவிரைவு ரயிலானது (22662) வரும் 19-ஆம் தேதி முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

Advertisement

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் சேது அதிவிரைவு ரயிலானது (22661) வரும் 20-ஆம் தேதி முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments