சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்!
சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 19 ஆம் தேதி முதல் ஏப். 5 ஆம் வரை தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்றும், தாம்பரத்துக்கு காலை 6.35 மணிக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோல, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 20 ஆம் தேதி முதல் ஏப். 6 ஆம் வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து இரவு 6.25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்ப திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
Southern Railway has announced that the Sethu Express train operating between Lumbpur - Rameswaram will operate from Tambaram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.