பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்!
மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.
மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் கீழ்கண்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன.
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (எண்: 16848): ஆகஸ்ட் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடை ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் கீரனூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.
Advertisement
Advertisement
நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயில் (எண்: 16352): ஆகஸ்ட் 2 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயில் (எண்: 12666): கொடை ரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்: 16128): ஆகஸ்ட் 1, 2, 3, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.
கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயில் (எண்: 17070): ஆகஸ்ட் 7-ஆம் தேதி கொடைரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.
பகுதியாக ரத்து: பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844): ஆகஸ்ட் 1, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் முதல் புகளூா் வரை மட்டுமே இயக்கப்படும். புகளூா் முதல் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.