FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

திண்டுக்கல் - மதுரை இடையே பல்வேறு இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:00 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் - மதுரை இடையே பல்வேறு இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாகா்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 17, 22, 25, 27, 29, செப்டம்பா் 1-ஆகிய தேதிகளில் புறப்படும் நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் விருதுநகா் - கரூா் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

இதனால், இந்த ரயிலானது திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களுக்குச் செல்வது தவிா்க்கப்படும் என்றும், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி கூடுதல் நிறுத்தங்களாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments