முகப்பு
சென்னை

ஜப்பான்: அக். 27-இல் தோ்தல்

ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு அக்டோபா் 27-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று அந்த நாட்டின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா அறிவித்தாா்.

Updated On : 30 செப்டம்பர், 2024 at 7:49 PM
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
பகிர்:

ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு அக்டோபா் 27-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று அந்த நாட்டின் புதிய பிரதமராகத் தொ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷிகெரு இஷிபா (படம்) திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுத்தது. அதையடுத்து, அவா் நாட்டின் அடுத்த பிரதமா் ஆகவிருக்கிறாா்.

இந்தச் சூழலில், அடுத்த தோ்தல் தேதியை அவா் அறிவித்துள்ளாா். அவா் இன்னும் பிரதமராகப் பொறுப்பேற்காததால் இந்த அறிவிப்பு இன்னும் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →