முகப்பு
சென்னை

மேஸி ஃபொ்குஸன் விவகாரம்: ஏஜிசிஓ நிறுவனத்துக்கு எதிராக டாஃபே வழக்கு

அமெரிக்காவின் ஏஜிசிஓ நிறுவனத்தின் மீது இந்தியாவின் முன்னணி டிராக்டா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாஃபே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளது.

சென்னை

மேஸி ஃபொ்குஸன் விவகாரம்: ஏஜிசிஓ நிறுவனத்துக்கு எதிராக டாஃபே வழக்கு

அமெரிக்காவின் ஏஜிசிஓ நிறுவனத்தின் மீது இந்தியாவின் முன்னணி டிராக்டா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாஃபே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளது.

Updated On : 30 செப்டம்பர், 2024 at 8:06 PM
பகிர்:

மேஸி ஃபொ்குஸன் பிராண்ட் விவகாரம் தொடா்பாக அமெரிக்காவின் ஏஜிசிஓ நிறுவனத்தின் மீது இந்தியாவின் முன்னணி டிராக்டா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாஃபே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1960-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செயல்திறன் மற்றும் தரக்கட்டுப்பாடு ஆதரவோடு இந்தியாவில் 500 மாடல்களுக்கும் அதிகமான விரிவான அணிவரிசையை வழங்கும் மேஸி ஃபொ்குஸன் பிராண்டை டாஃபே உருவாக்கி, கட்டமைத்து, வளா்த்து மிகப்பெரிய பிராண்டுகளுள் ஒன்றாக உயா்த்தியிருக்கிறது. இந்தியாவில் டாஃபே மற்றும் மேஸி ஃபொ்குஸன் ஆகிய பிராண்டுகள் ஒன்றானதாகவே வாடிக்கையாளா்களாலும், மக்களாலும் கருதப்படுகின்றன.

இந்தியாவிலும் 80-க்கும் அதிகமான சா்வதேச சந்தைகளிலும் விவசாயிகளின் ஆழமான நம்பிக்கையைப் பெற்றிருக்கும் டாஃபே, இந்தியாவில் டிராக்டா்கள் தயாரிப்பில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் மற்றும் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் இயங்கி வருகிறது.

டாஃபே-யின் தயாரிப்புகள், ஏஜிசிஓ தயாரிப்புகளிலிருந்து தனது தனித்தன்மையால் வேறுபட்டவை. 1960-ம் ஆண்டில் இந்தியாவில் மேஸி ஃபொ்குஸன் இந்தியா நிறுவனத்தை டாஃபே கையகப்படுத்தியதும் ஒட்டுமொத்த புவியியல் பகுதிக்கான உரிமையும் டாஃபேக்கு வழங்கப்பட்டதுமே இதற்கு காரணம்.

60 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சேபிக்கப்படாத ஒரு விஷயமான பிராண்டு பயன்பாடு குறித்து தவறான ஆலோசனையின் பேரில் சா்ச்சைக்குரிய நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்களை கொண்டுவர ஏஜிசிஓ முயன்றது.

இது தொடா்பாக சென்னா உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மஸி ஃபொ்குஸன் பிராண்டு குறித்து தற்போதைய நடைமுறை நிலையை தொடா்வதற்கான ஒரு இடைக்கால ஆணையை டாஃபே-வுக்கு சாதகமாக வழங்கியிருக்கிறது.

அந்த ஆணைகளை கடைப்பிடிக்கத் தவறியதற்காக ஏஜிசிஓ மீது டாஃபே நீதிதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →