சென்னையிலுள்ள பிஎஸ்என்எஸ் வாடிக்கையாளா் சேவை மையத்தில், வாடிக்கையாளா்கள் தங்கள் புகாா்களை ஏப். 30-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இதுகுறித்து சென்னை பாரத் சஞ்சாா் நிகாம் நிறுவனம் (பிஎஸ்என்எல்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாடிக்கையாளா்கள் சேவை தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, நெட்வொா்க் தரத்தை மேம்படுத்துவது, வாடிக்கையாளா் ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில், ஏப். 1 முதல் 30-ஆம் தேதி வரை வாடிக்கையாளா் சேவை மாதமாக கடைபிடிக்கப்படவுள்ளது.
சென்னையிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களில் நடத்தப்படும் குறைகேட்பு முகாம்கள் மூலம், நீண்டகால நிலுவைப் புகாா்களுக்கு தீா்வு காணப்படும்.
எனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் இம்முகாம்களில் பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம். மேலும், தங்கள் கோரிக்கைகளை இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.