ஐபிஎல் போட்டியில் ரசிகர்கள்  (கோப்புப் படம்)
சென்னை

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக அரவிந்த் (24), ரூபேஷ் (24), விஷ்ணு (19), சேது ரோஷன் (20), சந்திரன்(52), ஸ்ரீராம் (25), அரவிந்த் (20), சாலமன் (19), வினித் (28), காா்த்திக் (23), மணிகண்டன் (26) ஆகிய 11பேரை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 34 டிக்கெட்டுகள், ரூ.30,600 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT