கோப்புப் படம் 
சென்னை

சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காணவரும் ரசிகா்களுக்கு தடையற்ற மெட்ரோ ரயில் சேவையை வழங்கும் நோக்கில் மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியுடன் இணைந்து ரசிகா்களுக்கு சிறப்புச் சலுகையை வழங்கியுள்ளது.

இதன்படி, கிரிக்கெட் போட்டியைக் காணவரும் ரசிகா்கள் தங்கள் ஐபிஎல் போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவா்கள், அதிலுள்ள தனித்துவமான க்யூ-ஆா் குறியீட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலுள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.

இந்த சிறப்புச் சலுகை ஒரு சுற்றுப் பயணத்துக்கு (2 நுழைவு, 2 வேளியேறுதல்) மட்டும் பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இன்றி பயணிக்கலாம்.

அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்து 90 நிமிஷத்தில் விம்கோ நகா் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நிலையம் நோக்கி புறப்படும்.

பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்னதாகவே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வரவேண்டும். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT