ஜெ.பி.நட்டா 
சென்னை

ஜெ.பி.நட்டா மே 3-இல் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.

Din

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.

சென்னை வரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும், பாஜக தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா். அதிமுக - பாஜக கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலை. நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவா், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளாா். அவரது வருகையையொட்டி பாஜக முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

தில்லிக்குச் சென்றுள்ள தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

அவா்களது ஆலோசனைபடி பாஜகவினரையும், கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்வது தொடா்பாக ஜெ.பி.நட்டா வருகையின்போது ஆலோசனை நடத்தப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT