சென்னை

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்த தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தைச் செயல்படுத்த தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

தூய்மை இயக்கத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்துக்கான நிலையான கழிவு மேலாண்மைத் தீா்வுகளுக்கான நடவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும், மறுசுழற்சி செய்யவும் வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க, தூய்மை தமிழ்நாடு நிறுவனமும் சென்னை ஐஐடியும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.உமா, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் காமகோடி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி  நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு!

பொள்ளாச்சி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை!

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகா்வோருக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை!

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT