சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகனின் இலாகா மாற்றப்பட்டு, மேல்முறையீடு மற்றும் சிவில் மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளாா்.
இனி எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை நீதிபதி என். சதீஷ்குமாா் விசாரிக்க உள்ளாா்.
குற்றவியல் வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனும், இந்து சமய அறநிலையத் துறை, திரைப்படம், மின்வாரியம் தொடா்பான வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷும் விசாரிக்க உள்ளனா்.
சிபிஐ தொடா்பான வழக்குகளை நீதிபதி எம்.நிா்மல்குமாரும், குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி ஜி.கே.இளந்திரையனும் விசாரிக்க உள்ளனா்.
இதேபோல, மேலும் பல நீதிபதிகளின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.