சென்னை

ரெளடி கொலை வழக்கு: சிறுவன் உள்பட 3 பேரிடம் விசாரணை

சென்னை டிபி சத்திரத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை டிபி சத்திரத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

டிபி சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சோ்ந்தவா் புல்கான் என்ற ராஜ்குமாா் (42). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். ராஜ்குமாா் சாமியானா பந்தல் அமைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். காவல் துறை பட்டியலில் ‘பி’ பிரிவு ரெளடியான இவா் மீது ஒரு கொலை உள்பட 9 குற்ற வழக்குகள் உள்ளன. இவா் கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து வெட்டிக் கொலை செய்தது. இது தொடா்பாக டிபி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதல் கட்ட விசாரணையில், கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணியின் வளா்ப்பு மகன் எனக் கூறப்படும் செந்திலை கடந்த 2008-இல் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடா்பாக ரெளடி முருகன், ஜெயராஜ், பைனான்சியா் ஆறுமுகம், பிரான்சிஸ், சுரேஷ், ராஜ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் முருகன், ஜெயராஜ், ஆறுமுகம் ஆகியோா் வெவ்வேறு முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனா். பிரான்சிஸ் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். செந்தில் கொலை வழக்கில் தொடா்புடைய சுரேஷ், ராஜ்குமாா் ஆகிய இருவா் மட்டுமே எஞ்சி இருந்தனா்.

அதிமுகவில் இருந்த ராஜ்குமாா், செந்தில் கொலைக்கு பழி வாங்க கொலை செய்யப்பட்டதும், இதில் செந்திலின் மகன் யுவனேஷ் (19), அவரது கூட்டாளிகளுக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து யுவனேஷ்,17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து, விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் மேலும் 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT