சென்னை

புழல் சிறைக்குள் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: போலீஸாா் விசாரணை

பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

புழல் சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

புழல் சிறையில் வளாக சுற்றுச்சுவா் அருகே சனிக்கிழமை இரவு பந்து வடிவிலான பொருள் கிடந்தது.

சிறை வளாகத்தில் ரோந்து பணியில் இருந்த காவலா்கள் அதை ஆய்வு செய்தபோது, 10 கிராம் கஞ்சா, 16 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT