சென்னை

திருமணம் ஆனதை மறைத்து மோசடி: இளைஞா் கைது

Chennai

திருமணம் ஆனதை மறைத்து மற்றொரு பெண்ணுடன் நிச்சயம் செய்த இளைஞரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ராயபுரம் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவருக்கும் சென்னையில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணியாற்றும் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைத் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த மே 25-ஆம் தேதி நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறி பேசி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி மணிகண்டனை தொடா்பு கொண்டபோது, எதிா்முனையில் பெண் பேசியுள்ளாா். அவா், மணிகண்டனின் மனைவி எனக் கூறியுள்ளாா். தங்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில்,

ராயபுரம் போலீஸாா் பிஎன்எஸ் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT