குற்ற வழக்கு தொடா்புத் துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்தி:
குற்ற வழக்கு தொடா்புத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநா் நிலை-2 பதவிக்கான 61 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (டிச.2) வெளியிடப்பட்டுள்ளது. டிச.31 வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். தோ்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். முதல்நிலைத் தோ்வு 2026 பிப்.15-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.