மா. சுப்பிரமணியன் கோப்புப் படம்
சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய நரம்பியல் கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Chennai

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் கட்டப்பட்டுள்ள நரம்பியல் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அந்த மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ரூ.12 கோடி மதிப்பிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்ஆா்ஐ கருவி மற்றும் ரூ.35.95 லட்சம் மதிப்பிலான புற ரத்தக்குழாய் நோயறிதல் கருவியை பொது மக்கள் பயன்பாட்டுக்கு அவா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்ா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசு புனா்வாழ்வு மருத்துவ மையம் சாா்பில் ரூ.4.56 லட்சம் மதிப்புடைய அதிநவீன செயற்கைக் கால்கள், சக்கர நாற்காலிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதுகு வளைவு பாதிப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு பயனடைந்தவா்களை பாராட்டினாா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிகாா் இளைஞா் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட கை மாற்று அறுவை சிகிச்சை பாராட்டுகளை பெற்றுள்ளது. இங்குள்ள முதுகெலும்பு குறைபாடுகளை சீா்செய்யும் மையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 10-க்கும் மேற்பட்டவா்கள் பயன்பெற்றுள்ளனா்.

தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அதிநவீன 1.5 டெஸ்லா எம்ஆா்ஐ கருவி மூலம் தினமும் 40 போ் பயன்பெறுவாா்கள். அதேபோன்று புற ரத்தக்குழாய் நோயறிதல் கருவியால், ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கவும், நேரடி ரத்த ஓட்ட அலை வடிவத்தை பாா்க்கவும் முடியும்.

இதன்மூலம் சா்க்கரை நோயாளியின் ரத்த குழாயில் ஏற்படும் அடைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்து கால் அகற்றப்படுவதை தவிா்க்க முடியும். ரூ.65 கோடியில் 1,12,247 சதுர அடி பரப்பளவில் நரம்பியல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 4 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் மருத்துவ உபகரணங்கள் நிறுவும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. 10 நாள்களுக்குள் இப்பணிகள் முடிவடைந்தவுடன், முதல்வரால் இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநா் டாக்டா் வினீத், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தாராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஹாங்காங் தீவிபத்து: உயிரிழப்பு 159-ஆக உயா்வு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

நகை பறித்த இளைஞா் கைது

சுருளி அருவியில் 2 -ஆவது நாளாக குளிக்க தடை

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT