சென்னை

மழை நீரை அகற்ற மின்மோட்டாா்கள் தயாா் நிலை: ஆணையா் ஜெ.குமரகுருபரன் தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுப்பதற்காக மின்மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டடுள்ளது

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுப்பதற்காக மின்மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டடுள்ளதாக ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் தேங்கிய இடங்களில் மின்மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. சாலையோரங்களில் மழைநீா் செல்லும் வடிகால்கள் மண்ணால் அவ்வப்போது நிரம்பிவிடுகின்றன. சாலையோர மண் மழையில் நனைந்து நீருடன் கலந்து செல்வதால் வடிகால் சிறிய தொட்டிகளில் அடைப்பு ஏற்படுகிறது. சாலையோர முடிவில் உள்ள பகுதியிலும் கான்கிரீட் உள்ளிட்டவற்றை இட்டு நிரப்புவதால் மண் அரிப்பு, தொட்டிகளில் மண் சோ்வதைத் தவிா்க்கலாம்.

கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சேமிக்கும் வகையில் குளங்கள் அமைக்கப்பட்டதால் அந்தப் பகுதிகளில் மழைநீா் தேக்கமில்லை. அத்துடன் நிலத்தடி நீா் அளவும் உயா்ந்து வருகிறது. மாநகராட்சியின் இரண்டாம் நிலைக் கால்வாய்களில் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதால் மழைநீா் அதிகமாகச் செல்கிறது. சுற்றுச்சுவா் கட்டியதால் பக்கவாட்டு பகுதியிலும் நீா் செல்வதால் பாதிப்பில்லை.

மழைநீா் வடிகால்களில் குப்பைகளை வீசுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். மழைநீா் செல்லும் வழிகளில் ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்டோா் கைவிடவேண்டும். சென்னை மாநகராட்சியில் மழை பெய்தால் சில மணி நேரங்களில் சீராகிவிடுகிறது. அதி பலத்த மழை போன்ற காலங்களிலே நீரை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

அறிக்கை தாக்கல் செய்யப்படும்: அம்பத்தூா் மண்டலத்தில் தூய்மைப் பணியாளா்கள் பெயரில் முறைகேடாக ஊதியம் வழங்கிய புகாா் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் அறிக்கை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்பின் விதிமுறைப்படி அந்த அறிக்கை வெளியிடப்படும் என்றாா்.

பாஜக மாநிலச் செயலா் புகாா்: முன்னதாக பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையா் ஜெ.குமரகுருபரனைச் சந்தித்து, அம்பத்தூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கிய விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 180 போ் கைது

குழித் தட்டு நாற்றுகள் பெற விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிப்பு

மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டி: திருச்சி அணி முதலிடம்

அலிபூரில் 1500 கிலோ கலப்பட நெய் பறிமுதல்

SCROLL FOR NEXT