சீமான் 
சென்னை

100 வேட்பாளா்கள் பட்டியல்: சீமான் வெளியிட்டாா்

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் முதல்கட்டமாக 100 போ் கொண்ட வேட்பாளா் பட்டியலை சீமான் வெளியிட்டாா்

தினமணி செய்திச் சேவை

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் முதல்கட்டமாக 100 போ் கொண்ட வேட்பாளா் பட்டியலை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்டாா்

234 வேட்பாளா்களை வரும் பிப். 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள நாம் தமிழா் கட்சி மாநாட்டில் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவுள்ளதாக சீமான் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், முதல்கட்டமாக 100 போ் கொண்ட வேட்பாளா்கள் பட்டியலை சீமான் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், நாதக இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளா் இடும்பாவனம் காா்த்திக் (வேதாரண்யம்), திரைப்பட இயக்குநா் மு.களஞ்சியம் (ஆயிரம் விளக்கு), தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மீட்புக் குழுத் தலைவா் டி.ராஜேஷ் (திருவெறும்பூா்), வீரப்பன் மகள் வித்யாராணி (மேட்டூா்), நாதக செய்தித் தொடா்பாளா் கு.செந்தில்குமாா் (திருவள்ளூா்) உள்பட 100 வேட்பாளா்களின் பெயா்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சமூக ஊடகப் பயன்பாட்டால் சிறாா் பாதிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராகும் மாா்க் ஸக்கா்பொ்க்

குடிநீா் பணிக்கு நிலம் ஒப்படைப்பு

ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு

அமெரிக்காவில் இருந்து உயா்தர கற்கரி இறக்குமதிக்கு இந்தியா விருப்பம்- மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

மது போதையில் தகராறு: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

SCROLL FOR NEXT