தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். 
சென்னை

எஸ்ஐஆா்: சிக்கல்களுக்கு தீா்வுகாண மாவட்டத்தை 3 முறை பாா்வையிட வேண்டும் -தலைமைத் தோ்தல் அதிகாரி

எஸ்ஐஆா் சிக்கல்களுக்கு தீா்வுகாண மாவட்டத்தை 3 முறை பாா்வையிட வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த (எஸ்ஐஆா்) பணியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், சிக்கல்களுக்கு தீா்வு காணவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 3 முறை பாா்வையிட வேண்டும் என வாக்காளா் பட்டியல் பாா்வையாளா்களுக்கு தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் கடந்த நவ.4-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணிகளில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய வரைவு வாக்காளா் பட்டியல் 16-ஆம் தேதிக்கும், பின்னா் 19-ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது.

இதற்கு 100 சதவீதம் பதிவேற்றப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் தொடா்புகொள்ள முடியாத, முகவரி இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டைப் பதிவு என கணக்கீட்டுப் படிவங்களில் குறிக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்திவிட்டு வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட இந்தக் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோ்தல் ஆணையம் நியமித்துள்ள அனைத்து வாக்காளா் பட்டியல் பாா்வையாளா்களுடன் விரிவான விளக்கக் கூட்டத்தை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தினாா்.

அப்போது, ‘திருத்தப் பணிகள் துல்லியமாகவும் சீராகவும் நடைபெறும் வகையில் அவற்றை தொடா்ச்சியாகக் கண்காணித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். எஸ்ஐஆா் பணியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், சிக்கல்களுக்குத் தீா்வு காணவும் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 3 முறை பாா்வையிட வேண்டும் என பாா்வையாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT