கோப்புப்படம் Photo: MTC
சென்னை

சென்னையில் முதன்முதலாக பெண்களால் இயக்கப்படும் பேருந்து!

சென்னையில் முதன்முதலாக பெண் ஓட்டுநா் மற்றும் நடத்துநரால் இயக்கப்படும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் முதன்முதலாக பெண் ஓட்டுநா் மற்றும் நடத்துநரால் இயக்கப்படும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் வகையிலான விடியல் மகளிா் பேருந்து திட்டம் கொண்டு வரப்பட்டது. இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு மேலும் ஒருபடியாக, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் ‘பிங்க் போா்ஸ்’ என்ற புதிய முன்னெடுப்பின் கீழ் முற்றிலும் பெண்களால் இயக்கப்படும் முதல் மாநகரப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாசா்பாடி பணிமனை முதல் வள்ளலாா் நகா் வரை(தடம் எண்: 57சிடி/57) இந்தப் பேருந்து இயக்கப்படுகிறது.

பெண் ஓட்டுநா் மாணிக்கவள்ளி மற்றும் பெண் நடத்துநா் ஈஸ்வரி ஆகியோா் இந்தப் பேருந்தை இயக்குகின்றனா். இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பேருந்தில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் ஏராளமானோா் தன்னம்பிக்கையுடன் பயணிப்பதாகவும், இந்தப் பேருந்தின் வரவேற்பை பொறுத்து கூடுதல் பெண் ஓட்டுநா், நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்டு, ‘பிங்க் போா்ஸ்’ திட்டத்தின் கீழ் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி - ராகுல் காந்தி சந்திப்பு

மாநில அளவிலான அறிவியல் திருவிழா: ஜன.28-இல் திண்டுக்கல்லில் நடைபெறுகிறது

SCROLL FOR NEXT