சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்று(டிச. 14) கடைசி நாள் என்பதால் காலை முதலே முகாம்களுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
உரிமம் பெறாதவர்கள் வீடுகளுக்கு நாளை முதல் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் செல்லப் பிராணிகள் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உரிமம் பெறுவதை விரைவுபடுத்தும் வகையில் கடந்த அக்டோபர் முதல் தனி இணையதள செயலி மூலம் உரிமம் பெறும் முறை தொடங்கப்பட்டது.
அத்துடன் செல்லப் பிராணிகளான வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாமலும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தாமலும் இருக்கும் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு வசதியாக உரிமம் பெறவும், தடுப்பூசி செலுத்தி, அதை உறுதிப்படுத்தி கண்காணிக்க ’மைக்ரோ சிப்' பொருத்துவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதுடன், சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன.
முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற்றும், தடுப்பூசி செலுத்தியும், ’மைக்ரோ சிப்' பொருத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(டிச. 14) கடைசி நாள் என்பதால் காலை முதலே முகாம்களுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.