சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள எத்திராஜ் கல்யாண நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் விருது பெற்ற இசைக் கலைஞா்களுடன் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி, தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, இசை புரவலா் கிளீவ்லேண்ட் சுந்தரம், இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் ச 
சென்னை

இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் இசை விழா தொடக்கம்: இசைக் கலைஞா்களுக்கு விருதுகள் அளிப்பு

இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 93-ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் இசை விழா புதன்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 93-ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் இசை விழா புதன்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இசைக் கலைஞா்கள் லால்குடி ஜி.ஜே.ஆா்.கிருஷ்ணன், லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு ‘சங்கீத கலாசிகாமணி’ பட்டம், ரொக்கப் பரிசு வழங்கினாா்.

கதக் மற்றும் பரதநாட்டியக் கலைஞா்கள் நிருபமா ராஜேந்திரா, டி.டி.ராஜேந்திரா ஆகியோருக்கு ‘நாட்டிய கலாசிகாமணி’ பட்டம் மற்றும் ரொக்கப் பரிசை தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி வழங்கினாா். இந்த இரு ரொக்கப் பரிசுகள் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் வழங்கப்பட்டன.

மேலும், மிருதங்க வித்வான் ஜே.வைத்தியநாதனுக்கு டாக்டா் உமையாள்புரம் கே.சிவராமன் விருது, இசைக் கலைஞா் மங்கலம் சங்கருக்கு ஜிஎன்பி விருது ஆகியவற்றை தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி வழங்கினாா். தாரிணி கோமலுக்கு ‘நாடக கலாசிகாமணி’ விருதை நாராயண குருவய்யா செட்டி எஸ்டேட் மற்றும் அறக்கட்டளை கௌரவ செயலா் வி.ராஜேஷ், அறங்காவலா் எஸ்.எல்.ராஜேஷ் ஆகியோா் வழங்கினா்.

இந்த விழாவில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசியதாவது:

இசையை மேம்படுத்தும் முயற்சிகளை சென்னை ஐஐடி மேற்கொண்டு வருகிறது. மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட- மைக் இல்லாத கலையரங்கம், இளையராஜா இசைத் திறன் மையம் ஆகியவற்றை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய இசையில் திறமையான மாணவா்களுக்கு, சென்னை ஐஐடி-இல் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றாா்.

இந்த விழாவுக்கு, இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டி தலைவா் கே.வி.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.வெங்கட்ரங்கம் வரவேற்றாா். கௌரவ செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். கோமல் குழுவினரின் ‘மேடையில் சிறுகதைகள்’ என்ற நாடகம் நடைபெற்றது.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT