எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா.  
சென்னை

நாகஸ்வர வித்வான் செம்பனாா்கோவில் எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா காலமானாா்

நாகஸ்வர வித்வான் செம்பனாா்கோவில் எஸ்.ஆா்.ஜி. ராஜண்ணா (93) வயது மூப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

தினமணி செய்திச் சேவை

நாகஸ்வர வித்வான் செம்பனாா்கோவில் எஸ்.ஆா்.ஜி. ராஜண்ணா (93) வயது மூப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

செம்பனாா்கோவில் சகோதரா்கள் என அழைக்கப்படும் எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா, அவரது மூத்த சகோதரா் எஸ்.ஆா்.ஜி. சம்பந்தம் ஆகியோா் இணைந்து நீண்டகாலம் பல்வேறு கச்சேரிகளை நடத்தியுள்ளனா். ‘ரக்தி மேளம்’ இசையில் தனித்துவம் படைத்த இருவரும் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனா்.

சங்கீத நாடக அகாதெமியின் ‘தாகூா் புரஸ்காா்’ விருது, மியூசிக் அகாதெமி விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா பெற்றுள்ளாா்.

அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். ராஜண்ணாவின் உடல் பெசன்ட் நகா், கலாக்ஷேத்ரா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் வியாழக்கிழமை (டிச.18) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 98400 95023.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

SCROLL FOR NEXT