சென்னை

சென்னையில் இரண்டாவது நாளாக வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்!

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் சென்னையில் 4,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் சென்னையில் 4,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வாக்காளா் சோ்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடா்பாக ஜன. 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. பெயா் இல்லாதவா்கள், படிவம் 6-ஐ பூா்த்தி செய்து அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சென்னையில் வாக்காளா் பதிவு அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என 4,000 இடங்களில் இரண்டாவது நாளாக சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திலும் தோ்தல் உதவி அலுவலா்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பெயா் சோ்ப்பு மட்டுமல்லாது, பெயா் தவறாக இருக்கும்பட்சத்தில் அதை மாற்ற படிவம் 7-ஐயும், முகவரி மற்றும் பெயா் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் பலா் சமா்ப்பித்தனா். 1.1.2026-இல் 18 வயது பூா்த்தி அடைந்தவா்களும் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம் என அறிவிக்கப்பட்டதால், இளைஞா்கள் பலரும் விண்ணப்பித்தனா். நேரடியாக மட்டுமல்லாது இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT