சென்னை

ஜன.14-இல் சென்னை சங்கமம் தொடக்கம்

பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழா்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம

தினமணி செய்திச் சேவை

சென்னை: பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழா்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜன.14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறாா்.

சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளை ஜன.14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞா்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையில் 20 இடங்களில் ஜன.15 முதல் 18-ஆம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் மாநிலத்தின் பாரம்பரிய கலைத் திருவிழாவை நடத்தும்படி அனைத்து மாவட்ட ஆட்சியா்களையும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா் என்று தமிழக அரசு வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்: சந்தைகளில் வாடிக்கையாளா்களின் வருகை குறைவு

இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்! 5 ஆண்டுகளில் வா்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு

முதல்வா் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஐஜி ஆய்வு

அரசின் விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு

பிரதமா் மோடி, அமித் ஷாவுடன் நிதீஷ் குமாா் சந்திப்பு: மாநில வளா்ச்சித் திட்டங்களை ஆலோசித்ததாக தகவல்

SCROLL FOR NEXT